பன்றிக் கொட்டகையாக மாறியுள்ள பூங்கா

Update: 2026-03-01 11:09 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி தில்லைநகர் பகுதியில் அம்மா பூங்கா உள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவரை உடைத்து பூங்காவின் உள்ளே தொட்டி அமைத்து, அதனுள்ளே பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்கா கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் அடைந்து கிடக்கும் பகுதியாக மாறியுள்ளது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவில் உள்ள கழிவுநீர் தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்