ஓசூர் மஞ்சுசிரி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகளும், பொதுமக்களும் அச்சம் அடைகின்றனர். அழகு செடிகள் பட்டுப் போயும், காய்ந்தும் காணப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் பூங்காவை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே!
-மணியன், ஓசூர்.