புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-12-15 11:50 GMT

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 33-வது வார்டு எஸ்.கே.ஆர். நகரில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. அந்த பூங்காவுக்கு தினமும் சிறுவர்கள், முதியவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்