திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களுக்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவறை வசதி போதுமான அளவில் இல்லை. மேலும் நுழைவு வாயில் அருகில் உள்ள கழிவறை சுத்தமில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரம்மா, திருவண்ணாமலை.