வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் கோட்டையின் மேல் உள்ள சுற்றுச்சுவரில் நின்று அகழியுடன் கூடிய கோட்டையை ரசிக்கின்றனர். கோட்டை மேல்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மாடுகள் சுற்றி திரிகின்றன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் மாடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், வேலூர்.