பாழடைந்த சார் பதிவாளர் அலுவலகம்

Update: 2026-11-01 18:38 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் பாழடைந்துள்ளது. அங்கு சமூக விரோதிகள் சிலர் இரவில் மதுபானம் குடித்து விட்டு அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து வீசுகின்றனர். அங்கு கழிப்பிடம் சென்று அசுத்தப்படுத்தி வருகின்றனர். பாழடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜமாணிக்கம், தூசி. 

மேலும் செய்திகள்