பழுதான பயணிகள் நிழற்கூடம்

Update: 2026-11-01 19:40 GMT

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சி திருப்பாக்குட்டை கிராமத்தில் காட்பாடி-திருவலம் சாலையில் பஸ் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அது, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கட்டிடம் ஈரத்தால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படலாம். பழுதான பஸ் பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-நெல்சன், ஆரிமுத்துமோட்டூர்.

மேலும் செய்திகள்