திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிவல பாதை காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வெயிலின் தாக்கத்தினால் அவதி அடைந்த மக்கள் குடிநீர் நிலையத்தில் இருந்து குடிநீர் கிடைக்காமல் கடையில் வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்ராஜ், திருவண்ணாமலை.