கோவை காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்தை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு போடப்பட்டு உள்ள பல தெருவிளக்குகள் சரியாக ஒளிர்வது இல்லை. இதனால் மேம்பாலத்தின் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே விபத்துகள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் ஒளிராமல் இருக்கும் தெருவிளக்குகளை சரி செய்து, ஒளிர வைக்க வேண்டும்.