கோவை திருச்சி சாலை நீலிக்கோணம்பாளையம் அருகே வசந்தா மில் சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நீலிக்கோணம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பொதுமக்கள் வந்து பஸ் ஏறி, இறங்கி செல்கின்றனர். ஆனால் அந்த பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் பயணிகள் மழை, வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.