மதுரை நகர் புதுவிலாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கொசுக்கடியால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் இரவில் தூக்கமின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வருவார்களா?