தென்காசி தாலுகா கடையம் யூனியன் மேலம்பூர் பஞ்சாயத்துக்குட்ட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியை சுற்றிலும் சுமார் 6 குக்கிராமங்கள் இருக்கிறது. தனியார் இடத்தில் பட்டா மாற்றம் மற்றும் அனைத்து உபயோகங்களும் செய்வதற்கு சுமார் 7 கி.மீ. பயணித்து ஆம்பூர் அல்லது ஆழ்வார்குறிச்சி செல்லக்கூடிய நிலை இருக்கிறது. எனவே கருத்தபிள்ளையூர் பகுதியில் ஒரு இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.