தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் புங்கம்பட்டி-மயிலப்புரம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே பனை மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் நிற்கிறது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் பனை மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?