நடவடிக்கை தேவை

Update: 2026-11-15 18:06 GMT

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதிகளில் சிலர் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் வரும் பஸ்கள் உள்ளே நுழைய மிகவும் சிரமம் அடைகின்றன. மேலும் நகர பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை