சேலம் கோரிமேடு சந்திப்பு பகுதி மிகவும் முக்கியமான சந்திப்பு பகுதி ஆகும். குறிப்பாக ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, கன்னங்குறிச்சி, புதூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த சந்திப்பு வழியாக தான் செல்ல வேண்டும். காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் உள்ள சாலையில் இரும்பு குழாய் உள்ளது. இதனால் வாகனங்களின் டயர், பொதுமக்களின் கால்களை பதம்பார்க்கும் வகையில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டும்.