அடிப்படை வசதிகள் தேவை

Update: 2026-11-15 14:59 GMT

புதுக்கோட்டை மாநகராட்சி மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கற்பக நகரில் தெருவிளக்குகள் மற்றும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. மேலும், சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதுடன், பல நாட்களாக குப்பைகளும் அகற்றப்படாமல் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அருகில் தாய்சேய் நல விடுதி உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்றி, சாலைகள் மற்றும் தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்