‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-11-15 14:52 GMT

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமம் அண்ணாநகர் பகுதியில் பாலாம்பாடி சாலையில் இருந்து சுடுகாடு வரை உள்ள தெருவிளக்கு கம்பங்களில் ஒயர்கள் பழுதடைந்ததால் பல நாட்களாக விளக்குகள் எரியாமல் இருந்தன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்