தெருநாய்கள் தொல்லை

Update: 2026-11-15 14:35 GMT

ஏரியூர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைவீதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. அந்த நாய்கள் சாலையில் செல்லும் குழந்தைகள், பெண்களையும் கடிக்க பாய்கிறது. மேலும், தெருநாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. தொடரும் இந்த தெருநாய்கள் தொல்லையால் ஏரியூர் பகுதி வணிகர்களும், பொதுமக்களும் கடும் பீதியில் உள்ளனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்