ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காண படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் செல்லும் இடங்களுக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.