சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாத்தனி கிராம பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு அவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஒட்டிகள் துரத்தி சென்று கடிப்பதால் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த முன்வருமா?