சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் புழுதிபட்டி முதல் பொன்னமராவதி வரை செல்லும் நெடுஞ்சாலையில் ஓரங்களில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமமடைந்து வருவதுடன் சாலை ஓரங்களில் நடந்த செல்லும் பொதுமக்கள் இதில் இருந்து வெளிவரும் விஷப்பூச்சிகளால் மிகவும் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பபட்ட அதிகாரிகள் விரைந்து இந்த பகுதி சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.