ஆரல்வாய்மொழி கால்நடை மருத்துவமனையின் முன்பு பஸ்நிறுத்தும் உள்ளது. இந்த நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையானது மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பயணிகள் வரும்போது நிழற்குடையின் வெளிப்புறத்தில் வெளியிலிலும், மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி தற்போதுள்ள நிழற்குடையை அகற்றி விரிவாக்கம் செய்து புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், ஆரல்வாய்மொழி.