சீரமைக்கப்பட்டது

Update: 2026-11-15 09:01 GMT

 ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகே ஒரு பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த நிறுத்தத்தின் முன்பு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் தண்ணீர் நிற்கிறது. இதனால் அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி படத்துடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் முன் பகுதியில் சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-மெர்லின் ஷைலஜா, கீழ் ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்