சிதம்பரம் அருகே சிதம்பரநாதன்பேட்டையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது வாங்கி குடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்பவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதியடைகின்றனர். மேலும், வாகனங்களை சாலையின் குறுக்கே தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.