சங்கராபுரம் மணியாறு ஆற்றுப்பாலத்தின் அடிப்பகுதியில் ஆடு, மாடு இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்று நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே, ஆற்றில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது சங்கராபுரம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஆறு மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.