இடையூறான டாஸ்மாக்

Update: 2026-11-15 08:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருப்பதால் பெண்கள், குழந்தைகள், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் என அனைவரும் தினமும் அச்சத்துடனே அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இடையூறான டாஸ்மாக் மதுபான கடையை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்