கட்டிமாங்கோடு அருகே உள்ள சேக்காரவிளை மேலத்தெருவில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மழைநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, செடி-கொடிகளை அகற்றி ஓடையை தூர்வாரி மழைநீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ் கிருஷ்ணன், செக்காரவிளை.