அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் இல்லாததால், புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதற்காக சென்னை அல்லது புதுச்சேரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரை நியமித்து, தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.