திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2026-11-15 14:26 GMT

பென்னாகரம் நகரின் முக்கிய பகுதியாக உள்ளது முள்ளுவாடி பகுதி. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீதிகளில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டது. அதன் பிறகு அந்த சாலைகளை இன்று வரை சீரமைக்க வில்லை. இதனால் இந்த பகுதியில் பயணிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலைகள் சேதடைந்து காணப்படுகிறது. சாலை ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே தொடர் விபத்துகளை தடுக்க முள்ளுவாடி பகுதியில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்