பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

Update: 2026-11-15 14:30 GMT

பென்னாகரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த வழியாகவே சென்று வருகின்றனர். பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பென்னாகரம் பேரூராட்சி சார்பில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்