பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தெருநாய்கள் புகுந்து சுற்றித்திரிகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைவதுடன், சுகாதார பாதிப்புகள் ஏற்படுமோ என்ற கவலையும் நிலவுகிறது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.