பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், பேரளி கிராமத்தில் ஊர் ஏரியின் வடகிழக்குக் கரையையொட்டி பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை முறையாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தொட்டியை ஆய்வு செய்து உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.