குழிகளை மூட வேண்டும்

Update: 2026-11-15 15:02 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சித்தளவாய் ஊராட்சி, மேலடை கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்கள் அமைப்பதற்காக தோண்டிய குழிகள் மூடப்படாமல் உள்ளன. மழைக்காலம் என்பதால் குழிகளை சுற்றி புற்கள் வளர்ந்துள்ளதால் அவை இருப்பது தெரியாமல் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, அனைத்து குழிகளையும் உடனடியாக மூட சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்