நாமகிரிப்பேட்டை அருகே மலையாம்பட்டி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துகின்றனர். பின்னர் அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர், மீதமுள்ள தின்பண்டங்கள், குப்பைகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இது அந்த வழியாக செல்பவர்களை முகம் சுளிக்க செய்கிறது. மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடனே அந்த நிழற்கூடத்தை கடந்து செல்கின்றனர். உடனடியாக இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.