புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரவு நேரங்களில் மாடுகள் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.