சேந்தமங்கலம் அருகே வேட்டாம்பாடி ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த ஏரியில் தற்போது கழிவுநீர் அதிக அளவில் கலந்து வருகிறது. கால்நடைகள் அந்த ஏரியில் தண்ணீரை குடிக்கின்றன. கழிவுநீர் கலந்த தண்ணீரை அவை குடிப்பதால் அவற்றிற்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலையும் ஏற்படும். எனவே அந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.