சேலம் மாநகராட்சி 48-வது வார்டு சத்திரம்-லீபஜார் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நடைபாதை ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு மாட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பாதையில் பழைய இரும்பு பொருட்களும் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர். அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.