திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மலையடிப்பட்டி கிராமம் ஆவாரம்பட்டியில் உள்ள மலைக்குன்றில் உள்ள சுமார் 200 மரக்கன்றுகள் வெட்டப்பட்டு, மலைக்குன்று ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இயற்கை இடர்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் மலைக்குன்று ஆக்கிரமிப்பை அகற்றி, மரக்கன்றுகளை மீண்டும் நட்டு பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.