தெருநாய் தொல்லை

Update: 2026-11-15 17:41 GMT
செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை முதல் டோல்கேட் முக்கு பகுதி வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் இவை கூட்டமாக சண்டையிட்டு சாலையின் குறுக்கே பாய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே இங்கு தெருநாய் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்