பொன்னையை அடுத்த கீரைசாத்து ஊராட்சி மிளகாய்குப்பம் கூட்ரோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு 2020-21-ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆழ்துளை கிணறு அருகே தனியார் ஆழ்துளை கிணறு அமைத்ததால் அரசு ஆழ்துளை கிணறு முற்றிலும் தூர்ந்து போய் விட்டது. அதில் இருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், கீரைசாத்து.