மாடுகளால் தொல்லை

Update: 2026-11-15 19:08 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட சன்னதி தெரு, தேரடி பகுதி, பழைய பஸ் நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பஜார் சாலை நடுவே மாடுகள் படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்

பெயர் பலகை