வேலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள். ஆனாலும் போலீஸ் பூத்தைச் சுற்றி வாகன ஓட்டிகள் ஒரு சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். இதை காவல் பணியில் இருக்கும் போலீசார் கண்டு கொள்வதில்லை. மேலும் மாநகராட்சி நிர்வாகத்தினரும் இது குறித்து கேட்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரதிராஜா, வேலூர்.