சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

Update: 2026-11-15 19:24 GMT

நாட்டறம்பள்ளியில் பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில் ஆலமரம் உள்ளது. இந்த வழியாக திருப்பத்தூருக்கு செல்லும் சாலையும் உள்ளது. இந்தச் சாலையின் இருபுறம் காலை முதல் மதியம் வரை டிபன் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. சாப்பிட வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

-ரமேஷ், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்

பெயர் பலகை