ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் சித்தூர் செல்லும் எம்.பி.டி.சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சாலையில் அதிக எண்ணிக்கையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளால் பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-கருணாநிதி, வாலாஜா.