மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் கைப்பிடி சுவர்கள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.மேலும் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.