மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் தங்களது இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியல் செல்லும் பள்ளி மாணவர்கள், சாலையை கடக்க காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.