திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அல்லூர் கிராமத்தில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கிராம மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அன்னதான திட்டத்திற்கு பங்களிக்க தயாராக உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அன்னதான திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.