மதுரை மாவட்டம் குமாரம் முதல் அலங்காநல்லூர் செல்லும் 4 கி.மீ. சாலைகளில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களின் அதிக ஒளியால் எதிரில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குமாரம்.