ஆரணி அருகில் உள்ள சேவூர் பகுதியில் நுழைவுப் பாதையின் இடது மற்றும் வலது புறங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சாலையின் அகலம் குறைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, சேவூர் நுழைவுப் பாதையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, சேவூர்.