திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் முக்கிய வீதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தினமும் தொல்லையாக உள்ளது. பள்ளி மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நேரில் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.எம்.ஆனந்தன், வந்தவாசி.